Saturday, April 30, 2011

~இப்படியும் ஒரு கலெக்டர் இருப்பாரு இந்த தமிழ்நாட்டில் ....~

சகாயம் ..எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்..சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ..எஸ்., அதிகாரி சகாயம்.....

Related Posts Plugin for WordPress, Blogger...

Thursday, April 28, 2011

கேப்டனின் குற்றம்! நடந்தது என்ன?

தி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் சொன்னதாக தினமலர் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

ஓசூர் மக்களின் கோபத்திற்கு ஆளான கேப்டன்:
கும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, "உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு' என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர். ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர். 

தருமபுரி வேட்பாளரை அடித்த பிரச்சனை:
தர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், "பேச்சு கேட்கவில்லை' என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது. அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, "டிவி'க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, "இப்படி கவனக்குறைவா நடந்துக்கற... பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா' என்று சீறியுள்ளார். "இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது' என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.

"கோடியை இறக்குடா" பிரச்சனை:
 பிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், "பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்' என்று தொண்டர்களிடம் கூறினார். இந்த பேச்சில், "கொடியை கீழே இறக்குங்கள்' என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில "டிவி'க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.

கோவையில் கூட்டணி பிரச்சாரதிற்கு கலந்து கொள்ளாதது ஏன்?
 கோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார். 

கேப்டனை பார்க்காமல் ஏமாந்த மக்கள்:
கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர். பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.

வடிவேல் தாக்குதலுக்கு ஏன் பதிலளிக்கவில்லை?
 கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், "தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. "வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
                                         
                                                                     prakash.pn

~~இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.
உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3.
உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4.
வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8.
சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10.
.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. .சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11.
விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12.
புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13.
செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!
 
15.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. 

Wednesday, April 27, 2011

~காலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா!~

காலம் தலைகீழாய்த் தொங்குது கண்ணம்மா!

தொலைபேசி ஒலிக்கிறது; வெளியே நிற்பவன் வீட்டுக்குள் ஓடி வருகிறான் அதை

எடுப்பதற்கு. இது ஒரு காலம்.

இப்போது ஒலிக்கிறது; கையளவு தொலைபேசியோடு வீட்டுக்கு வெளியே பாய்கிறான்;

இல்லாவிட்டால் சமிக்ஞை கிடைப்பதில்லை.

முன்பெல்லாம் தொலைபேசியை எடுத்தவுடன், "எப்படி இருக்கிறாய்?" என்று

கேட்பார்கள். இப்போதெல்லாம் "எங்கே இருக்கிறாய்?" என்று கேட்கிறார்கள்.

ஒரு பெரிய மனிதரைப் பார்க்கச் செல்லும்போது இரண்டு எலுமிச்சம்பழங்களை

எடுத்துச் செல்வது ஒரு காலத்துப் பழக்கம். அவற்றின் விலை நான்கணா.
இருபத்தைந்து காசு. அவற்றுக்குப்  பயன்பாட்டு மதிப்புண்டு. இன்று
பிளாஸ்டிக்கில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள கண்ணைப் பறிக்கும் பல
வண்ணங்களையுடைய மணக்காத மலர்களைக் கொண்டு செல்கின்றனர். அதைக் கொடுத்தவர்
சென்ற பிறகு, அது குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். அதன் விலை முன்னூறு
ரூபாய்.

முன்பெல்லாம் மாவு அரைக்கும்போது குழவி சுற்றும்; ஆட்டுக்கல் நிலையாக

நிற்கும். இப்போது குழவி நிற்கிறது; ஆட்டுக்கல் சுற்றுகிறது.

பழைய நாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில்

இருப்பார்கள். குளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு
பூசிக்கொண்டு, ஓர் அன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர்
பாடல்களையும் தேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து
நிற்பார்கள். வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித்
தின்றுவிட்டு கோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற
இறைப்பணிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள்
என்பதால் அவர்களுக்கு "ஆண்டிப் பண்டாரம்" என்று பெயர். அவர்களுக்கு
மதிப்புண்டு.

இன்று, அதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம்

பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில்
ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்"
என்பதற்கு மாறாக "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று வேறு போதிக்கிறார்கள்.
விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை
கோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே
நினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற
கதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.

அன்றைக்குச் சாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை.

இன்று சாமியார்களின் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை
பிரிவுகளின் படியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன? அரசுகளுக்கு விலையும்
உண்டு; கொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.

காந்தி, ஆசிரமத்தில் வாழ்ந்தார்; ஆசிரமம் காந்திக்குச் சொந்தமில்லை.

தென்னாப்பிரிக்காவில் தனிச் சொத்துடைமை கொள்வதில்லை என்று காந்தி உறுதி
பூண்டார். இந்திய அரசியலே ஆன்மிகம் ஆனது.

இன்று அரசியல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார்

மட்டும் எப்படி யோக்கியனாக இருப்பான்? பிரேமானந்தாக்களும்,
நித்யானந்தாக்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப்
பிள்ளைகள்.

வழிநடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில்

மதிப்பீடுகளெல்லாம் போலியாகத்தானே இருக்கும்.

காலையில் நடப்பதன் மூலமோ, ஓடுவதன் மூலமோ வியர்வையை இயற்கையாக வெளியேற்றி

உடல்நலம் பேணலாம். இவன் தலையை மட்டும் வெளியே வைத்துக் கொண்டு, உடலை ஒரு
பீப்பாய்க்குள் வைத்துச் சுற்றிலும் நீராவியைப் பாய்ச்சி வியர்வையைக்
கூடப் பிதுக்கி எடுக்கிறானே!

தோட்டத்தில் வளர்க்க வேண்டிய மரத்தைத் தொட்டியில் வளர்க்கிறான். அது மீறி

வளர்ந்து தொட்டியை உடைத்து விடாதபடி அதை அப்போதைக்கப்போது வெட்டி விட்டு,
தன்னுடைய பிடியை மீறி விடாதபடி அரசை முதலாளித்துவம் கட்டுக்குள் வைத்துக்
கொள்வது போல மரத்தைச் செடியாக்கி வைத்துக் கொள்கிறான். அதற்குக் "குள்ள
மரம்" என்னும் நாமகரணம் வேறு.

ஒவ்வொரு நாளும் கழியும்போது தன் வாழ்வின் ஒரு பகுதி தொடர்ந்து

அறுபடுகிறது என்றும், நம்முடைய பயணம் ஒரு நாளைக்கு அமெரிக்காவுக்கும்
பிறிதொரு நாள் பிரான்சுக்கும் என்று நாம் எக்காளமிட்டு மகிழ்ந்தாலும்,
விசா தேவைப்படாத தொடர்பயணம் மயானம் நோக்கியது தான் என்று நம்முடைய
அறநூல்கள் வரையறுத்துச் சொன்னாலும் ஒவ்வோராண்டும் அறுபட்டுக் குறைவதை
பிறந்த நாளாகக் கொண்டாடிக் குதூகலிக்கிறதே நவீன காலத் தலைமுறை!

பிறப்பு என்பது துயரம்; அது ஒருவகையில் செய்ததையே செய்வதுதானே! உண்டதையே

உண்கிறோம்; உடுத்ததையே உடுக்கிறோம்; உரைத்ததையே அடுத்தடுத்து
உரைக்கிறோம்; கண்டதையே காண்கிறோம்; கேட்டதையே கேட்கிறோம்; சலிக்கவில்லையா
என்று கேட்பார் பட்டினத்தார்!

"பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே" என்பார் அப்பர். வான்புகழ்

வள்ளுவனிலிருந்து கடைசி அறநூலான ஆத்திசூடி வரை அனைத்துமே பிறவாப்
பெருநெறிக்கு வழி சொல்ல எழுந்த நூல்களாதலால், துயரத்துக்கு வித்திடும்
பிறப்பைக் கொண்டாடும் பழக்கம் தமிழனுக்கு இல்லை. ஆங்கிலவழிக் கல்வி
நமக்குக் கற்பித்த ஒரு புதுவகைக் கொண்டாட்டம் இது.

புத்தன், வள்ளுவன், ஏசு, நபிகள் நாயகம், காந்தி ஆகியோரின் பிறப்பால்

உலகம் மாற்றமுற்றது. ஆகவே இவர்களின் பிறப்பை இவர்களையல்லாத மக்கள்
கொண்டாடினார்கள். நம்முடைய பிறப்பால் நிகழ்ந்த மாற்றம் என்ன? நாமே
கொண்டாடிக் கொள்வது அசிங்கமாக இல்லையா?

ஐரோப்பியக் கலாசாரம் இன்னொரு கொண்டாட்டத்தையும் நமக்குக்

கற்பித்திருக்கிறது. அது "திருமண நாள்" கொண்டாட்டம்!

வெள்ளைக்காரர்கள் மூன்றாம் திருமண நாள் என்று கொண்டாடுவதற்குக் காரணம்

அடுத்த திருமண நாளை அந்த வெள்ளைக்காரி யாரோடு கொண்டாடுவாளோ?

மூன்றாண்டு நீடித்ததே அதிசயம் என்பதால் வெள்ளைக்காரர்கள் கொண்டாட

வேண்டியது தான்!

தமிழர்களின் நிலை அதுவல்லவே. கட்டக் கடைசியில் அவனுடைய தலைமாட்டில்

உட்கார்ந்து, விரித்த தலையோடு கூவிக் குரலெடுத்து அழுது, வாசல் வரை வந்து
அவனை அனுப்பிவிட்டு, எஞ்சிய காலமெல்லாம் அவன் தன்னைப் போற்றி வைத்துக்
கொண்ட நினைவுகளைச் சுமந்து கொண்டும், சுற்றியிருப்பவர்களிடம்
சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டும் வாழ்கிற ஒரு தமிழ்ப்பெண் எதற்காகத்
திருமணநாளைக் கொண்டாட வேண்டும்? மூச்சு விடுகிற நினைவே இல்லாமல் நாம்
மூச்சு விட்டுக்கொண்டிருப்பது போல், இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தும் பிணைந்தும் வாழும் நினைவே இல்லாமல் இயல்பாக
வாழ்கிறவர்களுக்குத் திருமண நாள் என்னும் பெயரில் கொண்டாடுவதற்கு என்ன
இருக்கிறது?

காலில் வலி இருந்தால்தானே கால் நினைவுக்கு வரும்; தலை வலிக்கும்போதுதானே

தலை இருப்பதே நினைவு வரும். காலையும், தலையையும் தொட்டுப் பார்த்து ஒரு
முறை நினைத்துக் கொள்வோமே என்பது வேலையற்ற வேலைதானே!

பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா என்று கொண்டாட்டங்களைக்கூட இரவல்

வாங்கத் தொடங்கி விட்டார்களே தமிழர்கள்.

இவை மட்டும்தானா?

அழகிப் போட்டி வேறு நடத்துகிறார்கள். இந்திய அழகி, தமிழ்நாட்டு அழகி,

சென்னை அழகி, வேலூர் அழகி, வந்தவாசி அழகி என்று ஊர் ஊருக்கு அழகிகள்
தேர்வுகளும் அறிவிப்புகளும் நடக்கின்றன.

ஒரு கடைக்காரனிடம் போய் ஒரு குறிப்பிட்ட வார இதழின் பெயரைச் சொல்லி,

"இருக்கிறதா?" என்று கேட்டால், "அது எதுக்கு சார்? அது பழசு; நாளைக்குப்
புதுசு வந்துவிடும்; காலையில் வாருங்கள்; தருகிறேன்" என்கிறான்.

போன வார இதழ் இந்த வாரம் வெறும் எடை மதிப்பை அடைந்து விடுவதைப்போல, சென்ற

ஆண்டு அழகி இந்த ஆண்டு தள்ளுபடி நிலைக்குப் போய் விடுகிறாள். இது என்ன
அழகு?

தமிழர்கள் அழகைப் போற்றத் தெரியாதவர்களில்லை. "நலம் புனைந்து உரைத்தல்"

என்று பெண்ணின் அழகைப் போற்றத் தனித்துறையையே வகுத்துக் கொண்டவர்கள்
அவர்கள்.

ஒரு பெண் ஊருணியில் தண்ணீர் குடிப்பதற்காகக் குனிந்து, இரு கைகளாலும்

மொண்டு நீரைக் குடிப்பதற்காக முகத்தருகே கொண்டு போனாள். அந்த நீரில்
மீன்கள் துள்ளுவதைப் பார்த்து, "ஐயய்யோ" என்று கூவிக் கொண்டே கைகளை
உதறினாள். கரையில் மீன்களைக் காணாமல் திகைத்து நின்றாள் என்று ஒரு
பெண்ணின் கண்களை மீன்களாகப் போற்றுகிறது விவேக சிந்தாமணி.

ஓர் அழகி, ஓர் இளம்பெண் என்று பொதுமைப்படுத்தி நலம் பாராட்டுவது தான்

தமிழர்களின் இயல்பே அன்றி, ஒரு குறிப்பிட்ட பெண்ணை, அவளை "இன்னாள்" என்று
பெயர் சுட்டி, அவளுடைய வடிவத்தை, அதன் வளைவு நெளிவுகளை, ஏற்ற இறக்கங்களை
பாராட்டுவது தமிழர்களின் பண்பு இல்லை.

"உன்னுடைய அகன்ற மார்பைப் பல பெண்களின் கண்கள் உண்கின்றன; நீ பரத்தன்;

பொதுப் பொருளான உன் மார்பை நான் புல்லேன்",என்று சண்டைக்குப் போகும்
தலைவியை நமக்குக் காட்டுகிறான் பேரறிவாளன் வள்ளுவன் (1311). அது ஒரு பெண்
ஊடலுக்குப் படைத்துக் கொண்ட கற்பனை தான் என்றாலும் தனக்கு மட்டுமே
உரித்தானவனாகவும், உரித்தானவளாகவும் இருக்க வேண்டும் என்பது தான்
தமிழர்களின் காதல் வாழ்வின் அடிப்படை.

அதே பல பெண்களை மேடையிலே நிறுத்தி, ஒவ்வொருத்தியையும் உறுப்புவாரியாகப்

பலரும் ஆராய்ந்து மதிப்பெண் போட்டு, "இவள் தான் சென்னை அழகி" என்று
அறிவிக்கப்படுவதைத் தமிழ்நாட்டால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது?

ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணை நடுவே வைத்து முன்னும் பின்னும்

இரண்டு இளைஞர்கள் அமர்ந்து செல்கின்றனர். கேட்டால் நட்பு என்கின்றனர்.
இரண்டு பேருக்கும் நட்பு; அதனால் தான் நடுவில் அமர்கிறாள்!

கண்ணகி தன் உயிருக்கு உயிரான கணவனை "நண்பன்" என்கிறாள். "நறைமலி

வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கி" (சிலம்பு - துன்பமாலை 38)

"உடன்பிறந்தாள் உடனாயினும் ஒரு வீட்டில் தனித்திருக்க நேரிடின் அதைத்

தவிர்த்து விடுக",என்று அறிவுரை கூறும் ஆசாரக்கோவை அதற்குக் காரணமாக
"ஐம்புலனும் தாங்கற்கு அரிதாகலான்" (65) என்று வரம்பு கட்டுகிறது!

அதியமானும், ஒளவையும் பால் வேறுபாடுகளைக் கடந்து நண்பர்களாய் விளங்கி

இருக்கிறார்கள். அறிவு முதிர்ச்சி, வயது இரண்டும் அந்த நட்பு திரிந்து
போகாமைக்கான காரணங்கள்.

இவள் தான் காற்சட்டையும், பனியனும் தான் பெண் விடுதலையின் அடையாளங்கள்

என்றல்லவா நினைக்கிறாள்.

இதிலே "பறக்கும் முத்தங்கள்" வேறு! உதடு பொருந்தாதவை எப்படி இனியவையாய்

அமையும்! எல்லாமே ஒரு பாவனைதானே! பாசாங்குதானே! போலிதானே!

ஆளுகின்றவன் போலி; அதிகாரி போலி; சாமியார்கள் போலி; பழக்கவழக்கங்கள்

போலி; பண்பாடு போலி; அனைத்துமே போலி!

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கருதிக் கருதி உருவாக்கப்பட்டுப் போற்றிக்

காக்கப்பட்ட அடிப்படைகள் தகரும்போது, எல்லா மட்டங்களிலும் அந்தத் தகர்வு
பிரதிபலிப்பது இயற்கைதானே! 

பழ. கருப்பையா

நன்றி:- தினமணி

Tuesday, April 26, 2011

~நான் எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?~

மக்கள் தொகை: 1,210,000,000 கோடி(1.21 billion)

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

15 கோடி வேலை தேடுவோர்
 
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
 
 1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்

1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்

25 கோடி பள்ளில படிப்பவர்கள்

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி

மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ  எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

 அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

விளம்பரம் இன் உங்கள் வீட்டில் ...

உங்கள் வீட்டில் டிவி பார்த்து இருப்பீர்கள் அதில் எத்தனி விளம்பரம் வரும்
அந்த வெளம்பரத்துக்கு அர்த்தம் தெரியாது ....
ஆனல் நங்கள் கண்டு பீடித்து உள்ளோம் ..

அது தான் இது ....
Related Posts Plugin for WordPress, Blogger...

~உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் (Top 10)~

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Monday, April 25, 2011

~குழந்தைகளின் எதிர்காலம் Vs பெற்றோர்களே! உஷார்!! ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!பெற்றோர்களே!படியுங்கள்.

பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா ? … படியுங்கள்.

குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.

முக்கியமான செய்தி. தயவு செய்து எல்லோரும் படிக்கவும் படித்த பிறகு உங்கள் தொடர்புகளுக்கு கண்டிப்பாக அனுப்பி வைக்கவும்.

1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். ( தூங்குவதைத்தவிர ).
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.

குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:

1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.
2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.
3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.
4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

வன்முறையும் தொலைக்காட்சியும்
1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.
4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
5. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.
6. லைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.
7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.
8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.
9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.
10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:
1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது ? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன், எழுதும் நேரத்திற்கு முன, சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.
2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.
4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.
5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.
6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.
7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.
டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின் ) மழலைச் சொல் கேளாதார் ' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள் !

ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார் !

பெற்றோர்களே ! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள் !
இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.
அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.
நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.
மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.
ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது. (ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பெற்றோர்களே! உஷார்!!

பெற்றோர்களே ! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?
சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் ' சுட்டி ' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.
பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.

சிலைகளாக

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.
கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா ?

குழந்தைகளின் எதிர்காலம் ?

இப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?

உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அலட்சியம் காட்டாதீர்!

இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள்.

எனவே ! பேற்றோர்களே ! குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி. வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.
அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.
இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.
குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும், நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இறைவன் நமது சமுதாயத்தை காத்தருள்வானாக!

Sunday, April 24, 2011

~ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு பொய்யான வதந்தி ... உண்மை இதோ ....~

நண்பர்களே!!!

*ேதசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

*மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
*
1999* ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
*
நு*கர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
*
இ*தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான்.
122 தகுதி
இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
*

நியாயக் கணக்கு:*

*
இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
*
அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை*2,59,200* கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
*
இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது"INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
*
மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும்.
அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
*
ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம் ,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
*
துரோகம்-**1:* உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
*
துரோகம்-**2: *பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
*
துரோகம்-**3: *தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
*
துரோகம்-**4: *MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
*
துரோகம்-**5: *தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
*
துரோகம்-**6:* நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
*
துரோகம்-**7: *இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
*
துரோகம்-**8: *நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
*
துரோகம்-**9: *ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
*
துரோகம்-**10: *ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
*
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

*ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை.
இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

*அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
*
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.
சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

*உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
*
எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும்.
செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.